சோழிங்கநல்லூரில் உள்ள செயிண்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் ஆண்டு தோறும் கல்லூரிகள் இடையேயான ‘ஜெட்ஸ்’ விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 12–வது கல்லூரிகள் இடையேயான ‘ஜெட்ஸ்’ மாநில விளையாட்டுப்போட்டி மார்ச் 1–ந்தேதி, 2–ந்தேதி மற்றும் 8–10–ந்தேதிகளில் நடக்கிறது.
மாநிலம் முழுவதும் இருந்து என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகம், பெண்கள் கல்லூரி என 95 அணிகள் பங்கேற்கின்றன.
கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, பால் பேட்மின்டன், பேட்மின்டன் (ஆண்கள் மட்டும்) டேபிள் டென்னிஸ், செஸ், கால்பந்து (ஆண்கள் மட்டும்) ஆகிய 8 விளையாட்டுகள் நடக்கிறது.
பெண்கள் விளையாட்டுப் போட்டி வருகிற 1 மற்றும் 2–ந்தேதிகளில் நடக்கிறது. ஆண்கள் விளையாட்டு போட்டி 8–ந்தேதி முதல் 10–ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தப்போட்டிக்கான மொத்த செலவு ரூ.12.28 லட்சம் ஆகும். கடந்த முறை செயிண்ட்ஸ் ஜோசப்ஸ் அணி ஓட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.
மேற்கண்ட தகவலை செயிண்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாக இயக்குனர் பாபு மனோகரன் தெரிவித்துள்ளார்.