கால்நடை தீவன ஊழல் வழக்கு என்னுடைய பிரதமர் ஆசையை கட்டுப்படுத்தாது. நானும்
ஒருநாள் பிரதமராக வருவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத்
தெரிவித்துள்ளார்.பாஜ, பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து பிரசாரம்
செய்து வருகிறது. அதேபோல் காங்கிரசிலும் மறைமுகமாக ராகுலை பிரதமர்
வேட்பாளராக முன்னிறுத்தி பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு
மாநில கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரதமர் ஆகி விட வேண்டும் என்ற
கனவில் இருக்கின்றனர். இதில் ஏற்கனவே முலாயம் சிங், மம்தா பானர்ஜி, மாயாவதி
போன்றோர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். அதே போல் தமிழகத்தில் முதல்வர்
ஜெயலலிதாவும் பிரதமர் ஆக வேண்டும் என அதிமுகவினர் பிரசாரம் செய்து
வருகின்றனர்.
இவ்வாறு பிரதமர் பதவியை பிடிப்பதற்கு பலரும் வரிசையில் நின்று கொண்டிருக்கையில் அவர்களை போல் பிரதமர் ஆசையை பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் வெளிப்படுத்தியுள்ளார். இவர் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வெளியில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தீவன ஊழல் வழக்கு எனது பிரதமர் கனவுக்கு முட்டுக்கட்டை போட முடியாது. நானும் ஒருநாள் இந்த நாட்டின் பிரதமராக வருவேன். ஒருநாள் என் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று ஆணை வரும். அப்போது நான் பிரதமராக வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.