Sunday, February 23, 2014

தீவிரவாதிகளின் அதிரடி தாக்குதல் 20 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹமீத் கர்சாயின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் தலிபான் தீவிரவாதிகள் வன்முறை தாக்குதல்களின் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். 

அவர்களை அரசுப் படையினர் வேட்டையாடுவதும், பழிக்குப் பழியாக ராணுவ வீரர்களை தலிபான்கள் தாக்கிக் கொல்வதும் தொடர் வாடிக்கையாகி விட்டது. 

இந்நிலையில், குணார் மாகாணம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ராணுவ புறக்காவல் நிலையத்தின் மீது இன்று அதிகாலை தலிபான் தீவிரவாதிகள் பயங்கரமான வெடிப்பொருட்களை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

படுகாயமடைந்த 7 ராணுவ வீரர்களை தலிபான்கள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். அவர்களை உயிருடன் மீட்பதற்கான நடவடிக்கைகல் முழு வேகத்தில் நடந்து வருவதாக குணார் மாகான கவர்னர் ஷுஜா உல் முல்க் ஜலாலா தெரிவித்துள்ளார். 

டெல்லியில் சமாஜ்வாதி கட்சி பிரம்மாண்ட சைக்கிள் பேரணி... காங்., பா.ஜ.க.வை புறக்கணிக்க அகிலேஷ் யாதவ் வேண்டுகோள்


மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் பேரணியை துவக்கி வைத்த அவர், தொண்டர்களை பார்த்து உற்சாக குரல் எழுப்பினார். மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற பாடுபடுமாறு அகிலேஷ் யாதவ், தொண்டர்களை கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், உத்திரப்பிரதேச அரசின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  

மேலும் பேசிய அவர் இந்த சைக்கிள் பேரணி மூலம், கட்சித் தொண்டர்கள் நமது சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். ஆட்சி மாற்றம் நிச்சயம் நடைபெறும் என்றும் சமாஜ்வாதி கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார். காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்று சக்தியாக சமாஜ்வாதி கட்சியை முன்னிறுத்த முலாயம்சிங் யாதவ் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக கட்சி சின்னமான சைக்கிளை வைத்து பேரணி நடத்தி மக்களை கவரும் திட்டத்தை அவர் செயல்படுத்தி வருகிறார். உத்திரப்பிரதேசத்திலுள்ள 80 மக்களவை தொகுதிகளில், 70 தொகுதிகளை கைப்பற்ற சமாஜ்வாதி கட்சி வியூகம் அமைத்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆம்ஆத்மி போல் எக்கட்சியாவது பாடுபட்டால் அரசியலில் இருந்தே விலகத் தயார்!


ரோதக்: டீ விற்றதாக கூறிக்கொள்ளும் நரேந்திர மோடிக்கு ஹெலிகாப்டர் வந்தது எப்படி என்று ஆம்ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். ஹரியானா மாநிலம் ரோதக்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், மோடியின் ஒவ்வொரு தேர்தல் பிரச்சார பேரணிக்கும் ரூ.50 கோடி செலவாகிறது என்றும் குறிப்பிட்டார். ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்கும், பாஜகவிற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் மோடியின் பேரணி செலவுகளுக்கு பணம் கொடுப்பவர் முகேஷ் அம்பானி என்று பரபரப்பு குற்றச்சாட்டையும் கெஜ்ரிவால் தெரிவித்தார். கடினமான கேள்விகளை மோடியின் முன் மக்கள் வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.நரேந்திர மோடியை ஊடகங்கள் தான் பெரிய தலைவராக காட்டுவதாகவும், அம்பானியின் சுவிஸ் வங்கிக் கணக்கு எண்ணை தர தாம் தயாராக இருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் முகேஷ் அம்பானி மீது பாஜக நடவடிக்கை எடுக்கத் தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.மோடியும், ராகுல் காந்தியும் அம்பானியின் சட்டைப் பையில் உள்ளதாகவும் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். கெஜ்ரிவாலின் அதிரடி குற்றச்சாட்டுக்களால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை துவக்கி பேசிய கெஜ்ரிவால், ஆம்ஆத்மி போல் எந்தக் கட்சியாவது பாடுபட்டால் அரசியலில் இருந்தே விலகத் தயார் என்றும் சவால் விடுத்துள்ளார். டெல்லியில் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைத்தால் ஊழலை முற்றாக ஒழிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். கொள்கைக்காகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கெஜ்ரிவால் விளக்கமளித்துள்ளார்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அமைச்சர் காமராஜ் ரத்ததானம்

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்தநாளையொட்டி தமிழக உணவுத்துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ஆர்.காமராஜ் 18–வது முறையாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இன்று (23–ந்தேதி) ரத்ததானம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவருடன் அ.தி.மு.க.வை சேர்ந்த 666 பேரும் ரத்ததானம் செய்தனர். பின்னர் நன்னிலம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 6666 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மரக்கன்றுகள், தையல் எந்திரம், வேட்டி சேலைகள், 3 சக்கர சைக்கிள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம் மாவட்ட மாணவர் அணி செயலாளர் விஜயராகவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சி.பி.ஜி. அன்பு, மாவட்ட பொருளாளர் பன்னீர் செல்வம், திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி அம்பிகாபதி, திருவாரூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் மலர்மணிகண்டன், ஒன்றிய செயலாளர் பி.கே.யு.மணிகண்டன், நகர்மன்ற தலைவர் வி.ரவிச்சந்திரன், நகர பேரவை செயலாளர் எஸ்.கலியபெருமாள், ஒன்றிய பேரவை செயலாளர் முருகானந்தம், திருவாரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஏ.எஸ்.அன்னக்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் வலங்கைமான் அருணாச்சல கார்டனில் நடைபெறும் விழாவில் 3 ஆயிரத்து 300 பேருக்கு நலத்திட்ட அமைச்சர் காமராஜ் வழங்குகிறார்.
இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

இந்திய கருவூலத்தை அபகரிக்க நினைக்கும் கை தடுக்கப்படும்: மோடி பேச்சு


பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டிற்கு சேவை செய்ய உங்களது ஆசிர்வாதங்களை எனக்கு வழங்குங்கள். குஜராத்திற்கும் பஞ்சாபிற்கும் சிறப்பு இணைப்பு உள்ளது. புஜ் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் குரு நானக் தேவ் தங்கியிருந்த குருத்வாரா சேதமடைந்ததது. அதை வல்லுனர்களை கொண்டு உடனடியாக கட்டி தர நடவடிக்கை எடுத்தோம். 

குஜராத்திலுள்ள கட்ச் பகுதி ஒரு வரண்ட பூமியாகும். அப்பகுதியில் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பலர் வாழ்ந்து வருகின்றனர். அந்த வரண்ட பூமி அவர்களின் கடுமையான உழைப்பால் இன்று பசுமையாக காட்சி தருகிறது. குஜராத்தில் வசிக்க ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உள்ளது. அங்கு வசிக்கும் எந்த சீக்கிய விவசாயியும் வெளியேற வேண்டியதில்லை. மாறாக அவர்களுக்கு இடைஞ்சல் தரும் அதிகாரிகள் தான் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். 

காஷ்மீரிலிருந்து கன்னியாக்குமரி வரை இந்தியா ஒன்றே. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இங்குள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உரிமையுடையவர்கள் ஆவார்கள். உங்கள் ஆசியோடு இந்தியாவிற்கு சேவை வாய்ப்பு எனக்கு கிடைத்தால் இந்திய நாட்டின் கருவூலத்திற்கு பாதுகாவலானாக இருந்து அதை கைப்பற்ற நினைக்கும் "கை" யை தடுப்பேன் என்று மோடி கூறினார்.

வலியோடு இருப்பவருக்கு உதவுங்கள்: ராகுல்


உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது; 

உத்தராகண்ட் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்ட போது நமது தேசம் முழுவதும் அதன் பின்னால் நின்று உதவியது. அது போல் நாட்டில் எங்கு பாதிப்புகள் நேர்ந்தாலும், அங்கு சென்று வலியால் துடிப்பவர்களுக்கு அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அரசியலில் கர்வத்திற்கு என்றும் இடமில்லை. ஒருவருடைய வலியை உணரவேண்டுமானால் ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் உள்ள கர்வத்தை வெளியேற்றவேண்டும். இன்று இம்மாநில முதலமைச்சரிடம் நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு குறித்து விவாதித்தேன். 

இம்மாநிலத்தில் சுற்றுலா காலம் துவங்குவதற்கு முன் இங்கு மறுகட்டமைப்பு பணிகள் முடிந்துவிடும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இங்கு பேரிழப்புகள் ஏற்பட்டபோது ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென நினைத்து ஆபத்தில் சிக்கிய மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தனர். 

இம்முயற்சியில் தங்கள் ராணுவ வீரர்கள் சிலரையும் அவர்கள் இழந்தனர். நாட்டில் உள்ள பெண்கள் 12 எரிவாயு சிலிண்டர்கள் வேண்டும் என்றார்கள். அவர்களது கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. பெண்கள் முன்னேறாமல் நமது நாடு ஒரு போதும் வல்லரசாக முடியாது. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்வதாக முதல்வர் கூறினார். 

நான் அவரிடம் 20 மணி நேரம் வேலை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளேன். எனது தந்தை தான் கம்ப்யூட்டரை முதன் முதலில் இந்தியாவிற்கு கொண்டு வந்தார். ஆனால் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு தாங்கள் தான் காரணம் என்று எதிர்க்கட்சினர் கூறுகின்றார். ஆனால் இது முற்றலும் பொய்யான தகவலாகும் என ராகுல் கூறினார்.

சவூதி இளவரசர் 26-ம் தேதி இந்தியா வருகை


சவூதி அரேபியா நாட்டின் இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் 3 நாள் பயணமாக வரும் 26-ம் தேதி இந்தியா வருகிறார். 

சமீபத்தில் சவூதி அரேபியா நாட்டுக்கு சென்றிருந்த இந்திய துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, அந்நாட்டின் பட்டத்து இளவரசரை சந்தித்த போது இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். 

அவரது அழைப்பை ஏற்று சவுதியின் துணை பிரதமராகவும், ராணுவ அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் வரும் புதன்கிழமை இந்தியா வருகிறார். 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோரை சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ள இளவரசருடன் சவூதியின் மந்திரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பிரபல தொழிலதிபர்களும் வருகின்றனர். 

கடந்த 2010-ம் ஆண்டு ரியாத் மாகாண கவர்னராக பதவி வகித்த போது இந்தியா வந்திருந்த இவர் தற்போது இரண்டாவது முறையாக டெல்லி வருகிறார். வரும் 28-ம் தேதி வரை இங்கு தங்கியிருப்பார் என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியா- சவூதி அரேபியாவுக்கிடையில் கடந்த ஆண்டில் மட்டும் 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருதரப்பு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்தியாவுக்கு தேவையான பெட்ரோலிய கச்சா எண்ணையின் பெரும்பகுதி சவூதி அரேபியாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. சுமார் 30 லட்சம் இந்தியர்கள் சவூதியில் வேலை செய்து வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம். 

சவூதி மன்னரான அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் கடந்த 2006-ம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அரியானா முதலமைச்சர் நிலத்தரகராக செயல்படுகிறார்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு


அரியானா மாநிலத்தில் உள்ள ரோடக் நகரில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது; வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் உர விலை உயரப்போகிறது. இதில் பா.ஜ.கவும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றது. 

எரிவாயு விலை நிர்ணயம் குறித்து மோடிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இது தொடர்பாக முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டேன். அது போல் கருப்பு பணத்தை கொண்டு வருவோம் என மோடி கூறி வருகிறார். நான் இங்கே அம்பானியின் ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்களை கொண்டு வந்துள்ளேன். அதன் மீது மோடி நடவடிக்கை எடுக்க தயாரா என கேள்வியெழுப்புகிறேன். 

இங்கு சாமானிய மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இம்மாநில முதல்வர் பூபீந்தர் சிங் ஹுடா முதலமைச்சராக செயல்படாமல் நிலத்தரகர் போல் செயல்படுகிறார். 

அம்பானி நிறைய செய்திதாள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதன் பொறுப்பாசிரியர்களை அழைத்து மோடி மற்றும் ராகுல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்புங்கள். கெஜ்ரிவாலை புறக்கணியுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் ஒரு பொறுப்பாசிரியர் மட்டும் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டார். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கட்சியினர் டாடா மற்றும் ரிலையன்ஸ் போன்ற பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்தி வருகின்றனர். 

ஆனால் நாங்கள் ஏழை மக்களுக்காக பணிபுரிந்தோம். உடனே எங்களை அழிக்க நினைக்கிறார்கள். நாங்கள் பதவிக்காக ஆட்சி நடத்த முன்வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஆட்சிக்கு வந்தோம். அவ்வாறு நல்லது செய்யாதவாறு இரண்டு கட்சிகளும் தடுத்ததால் பதவியே தேவையில்லை என்று ராஜினாமா செய்தோம் என கெஜ்ரிவால் பேசினார்.

சோனியாவுடன் சந்திரசேகர ராவ் திடீர் சந்திப்பு


தெலுங்கானா மாநிலம் அமைக்க முழு முயற்சி மேற்கொண்ட சோனியா காந்தியை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்துடன் சந்தித்தார்.

அப்போது அவருக்கு தெலுங்கானா மக்களின் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக ராவ் தெரிவித்தார். ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவை பிரிக்க சோனியா எடுத்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என ராவ் மேலும் கூறினார்.

பின்னர் செய்தியார்களிடம் பேசிய ராவ், சோனியாவுக்கு நன்றி மட்டும் தெரிவித்ததாகவும், வேறு எதுவும் அரசியல் பேசவில்லை என்று தெரிவித்தார். தெலுங்கானா மாநில விவகாரத்தை கவனித்து வந்த திக் விஜய் சிங்குடன் கலந்து பேசி நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என அவர் கூறினார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சத்யநாராயணா கருத்து தெரிவிக்கையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தங்கள் கட்சியுடன் வெகு விரைவில் இணையும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.

பேஸ்புக்கை ஆட்டி படைத்த வாட்ஸ் ஆப்’ ஆக்டன்




வரலாறு 

பிரைன் கதை  நிச்சயம் பிரமிக்கத ஒன்று.... யார் நம்மை ஒதுகினாலும் அதிலிருந்து வீறு கொண்டளுவது எப்படி என்ற தத்துவமே அடங்கியுள்ளது 

இதே பிரைன் நான்கு ஆண்டுகளுக்குமுன் பேஸ்புக்   நிறுவன வாசலில் வேலை கேட்டு போய் நின்றார்.அவருக்கு கிடைத்த பதில் நீ வேண்டாம் என்பதே...

ஆனால் இன்று பிரைன் நிறுவன  வாசலில் வந்து  அவரது நிறுவனதை இருகைகளும்  ஏந்தி வாங்கியுள்ளது. பேஸ்புக்... 

 பேஸ்புக்கிடம்  வேலைகேட்டு போய் அவர்கள் நிரகரித்தவுடன் அதை ட்விட்டரில் போட்டிருக்கிறார் பிரைன் அதில் என்னை  பேஸ்புக்  நிராகரித்து விட்டது.அருமையான மக்களுடன் இணைத்திருக்க கிடைத்த வாய்ப்பு அது.வாழ்க்கையின் அடுத்த சாதனைக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரைன்...

பேஸ் புக் நிரகரித்தவுடன் சோர்ந்து போய் விடவில்லை பிரைன். தனது கடினமான உழைப்பால் பேஸ் புக் தன்னை தேடி வர வைத்து விட்டார் பிரைன் தனது வாட்ஸ் ஆப் சாதனையால்...

பேஸ்புக்கில் வேலைகேட்டு கிடைக்கவில்லையே என்று விரக்க்தியில் ட்விட்டரில் செய்தி போட்டிருந்தார் அல்லவா..

சோகம் என்னவென்றால் டூவிடரும் கூட ப்ரைனை ஒரு கட்டத்தில் நிராகரித்த நிறுவனம்தான்...


நாமெல்லோரும் முட்டையில் இருந்து கோழி வந்தாதா....  கோழியில் இருந்து முட்டை வந்தாதா... என்று கதை பேசிக்கொண்டிருக்கிறோம் 


ஆனால் ப்ரைன்னை பாருங்கள்....ஒரு முட்டைக்கு பக்கத்தில் எத்தனை முட்டையை போட்டு பேஸ்புக்கை ஆட்டி படைத்தது விட்டார் பாருங்கள் .....

தலிபான்கள் மீது தொடரும் விமான தாக்குதல்: வசிரிஸ்தானில் இருந்து 50 ஆயிரம் பழங்குடியினர் வெளியேறினர்

வன்முறை தாக்குதல்களின் மூலம் கடந்த பத்து வருடங்களாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கிய தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்துடன் பாகிஸ்தான் அரசு கடந்த வாரம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

எனினும், கடந்த 2010 ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட 23 துணை ராணுவ சிப்பாய்களைக் கொன்ற விபரத்தை தலிபான் இயக்கம் வெளியிட்டதில் அமைதிப் பேச்சுவார்த்தை பின்னடைவைச் சந்தித்தது.

இந்த நிலையில், தலிபான்கள் மறைந்து வாழும் பழங்குடிப் பகுதியான வசிரிஸ்தானில் விமானத் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உத்தரவிட்டார். வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலி பகுதி மற்றும் கைபர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட அதிரடி விமான தாக்குதலில் 40 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கைபர் பகுதி தொழிற்சாலை ஒன்றில் தயாரான வெடிபொருட்களும் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த பகுதிகளில் விமான தாக்குதல் நடத்தி தலிபான்களை அழித்தொழிப்பதற்கான அதிரடி திட்டம் ஒன்றினை பாகிஸ்தான் ராணுவம் தீட்டி வருவதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கூட்டம் கூட்டமாக அப்பகுதியை விட்டு வெளியேறி வருகினர். கடந்த ஒரு மாத காலத்தில் 50 ஆயிரம் மக்கள் உயிர் பயத்தில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுக்கோட்டை வாரச்சந்தையில் பெரும் தீ விபத்து: கடைகள் எரிந்து நாசம்

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வாரச்சந்தை நடைபெறும். இங்கு 120 கடைகள் உள்ளன. இந்த பகுதியில் இன்று மதியம் திடீரென ஒரு கடையில் தீப்பிடித்தது. அந்த தீ அங்கிருந்த மற்ற கடைகளிலும் பரவியது.

கடைகள் பெரும்பாலும் மூங்கில்கள், கீற்றுக் கொட்டைகளை பயன்படுத்தியே அமைந்திருந்தால் பெரும் தீயாக பரவியது. இந்த வாரச்சந்தைக்கு அருகிலிருந்த குடிசைப் பகுதிகளுக்கும் தீ பரவியது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் 5 வண்டிகளின் உதவியுடன் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.

வாரச்சந்தை கடைகளில் சுமார் 20 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளன. மேலும் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு நிமிடத்தில் 133 தேங்காய்களை வெறுங்கைகளால் உடைத்து வாலிபர் சாதனை

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் நகரில் வசிக்கும் பிரமோத் யாதவ் என்ற வாலிபர் வெறுங்கைகளால் ஓரே நமிடத்தில் 133 தேங்காய்களை உடைத்து சாதனை படைத்துள்ளார். டாமாட்ரி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இச்சாதனையை செய்தார்.

இச்சாதனையை தொடர்ந்து உலக சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது. விரைவில் அவர் லண்டனுக்கு பயணம் செய்து உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரமோத் ஒரு நிமிடத்தில் 100 தேங்காய்களை உடைத்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.