Sunday, February 23, 2014

தீவிரவாதிகளின் அதிரடி தாக்குதல் 20 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹமீத் கர்சாயின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் தலிபான் தீவிரவாதிகள் வன்முறை தாக்குதல்களின் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். 

அவர்களை அரசுப் படையினர் வேட்டையாடுவதும், பழிக்குப் பழியாக ராணுவ வீரர்களை தலிபான்கள் தாக்கிக் கொல்வதும் தொடர் வாடிக்கையாகி விட்டது. 

இந்நிலையில், குணார் மாகாணம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ராணுவ புறக்காவல் நிலையத்தின் மீது இன்று அதிகாலை தலிபான் தீவிரவாதிகள் பயங்கரமான வெடிப்பொருட்களை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

படுகாயமடைந்த 7 ராணுவ வீரர்களை தலிபான்கள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். அவர்களை உயிருடன் மீட்பதற்கான நடவடிக்கைகல் முழு வேகத்தில் நடந்து வருவதாக குணார் மாகான கவர்னர் ஷுஜா உல் முல்க் ஜலாலா தெரிவித்துள்ளார்.