Sunday, February 23, 2014

ஜெயலலிதா பிறந்த நாள்: அமைச்சர் காமராஜ் ரத்ததானம்

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்தநாளையொட்டி தமிழக உணவுத்துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ஆர்.காமராஜ் 18–வது முறையாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இன்று (23–ந்தேதி) ரத்ததானம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவருடன் அ.தி.மு.க.வை சேர்ந்த 666 பேரும் ரத்ததானம் செய்தனர். பின்னர் நன்னிலம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 6666 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மரக்கன்றுகள், தையல் எந்திரம், வேட்டி சேலைகள், 3 சக்கர சைக்கிள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம் மாவட்ட மாணவர் அணி செயலாளர் விஜயராகவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சி.பி.ஜி. அன்பு, மாவட்ட பொருளாளர் பன்னீர் செல்வம், திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி அம்பிகாபதி, திருவாரூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் மலர்மணிகண்டன், ஒன்றிய செயலாளர் பி.கே.யு.மணிகண்டன், நகர்மன்ற தலைவர் வி.ரவிச்சந்திரன், நகர பேரவை செயலாளர் எஸ்.கலியபெருமாள், ஒன்றிய பேரவை செயலாளர் முருகானந்தம், திருவாரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஏ.எஸ்.அன்னக்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் வலங்கைமான் அருணாச்சல கார்டனில் நடைபெறும் விழாவில் 3 ஆயிரத்து 300 பேருக்கு நலத்திட்ட அமைச்சர் காமராஜ் வழங்குகிறார்.
இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.