Thursday, February 27, 2014

மைனாவுக்கு கட்டிப்பிடிக்காவிட்டால் தூக்கமே வராதாம்

தலைவாவுடன் ஆட்டம் போட்ட மைனா நடிகை செல்லமாக நாய்க்குட்டி ஒன்றை வைத்து வளர்த்து வருகிறாராம். பல நடிகைகள் தாங்கள் வளர்க்கும நாய்க்குட்டியை பாதுகாக்க அதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர். சூட்டிங் இல்லாத நேரத்தில் அவற்றுடன் கொஞ்சி விளையாடி பொழுதைக் கழிப்பர். 

ஆனால், பால் நடிகையோ இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் தனது செல்ல நாய்க்குட்டியை எங்கும் அலைய விடாமல், இவர் உறங்கும்போதும் தன் அருகிலேயே படுக்க வைத்துக் கொள்கிறாராம். 

இதற்கு முன் நடிகைகு இப்படியொரு பழக்கம் இருந்தது கிடையாதாம். திடீரென தனது நாய்க்குட்டி மீது பாசம் வந்ததில் இருந்து அதை கட்டிப்பிடித்து தூங்கினால்தான் இவருக்கு தூக்கமே வருகிறதாம். இதனால் நடிகையின் தாய்க்குலம் அவரின் எதிர்காலத்தை எண்ணி ஏக்கத்தில் கண்ணீர் விடுகிறாராம். 

இயக்குனரை மாமா என்று அழைக்கும் நடிகை!

நாடோடியாய் தமிழ் சினிமாவில் நுழைந்து, எங்கேயோ சென்று எப்போதும் போல் வலம்வந்து புலிவாலை பிடித்த மலையாள நடிகை தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரத் தொடங்கிவிட்டார். தற்போது இவர் கைவசம் ஒருசில படங்கள் இருந்தாலும், தன்னை தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்திய சுப்ரமணியத்தாரை தினமும் நன்றியுடன் நினைவு கூர்கிறாராம். 

இவரை எப்போதும் மாமா என்றுதான் உரிமையோடு அழைப்பாராம். தன்னுடைய குருவாகவும், வழிகாட்டியாகவும் அவரைதான் நினைவில் வைக்கிறாராம். தன்னுடைய குருநாதரை பின்பற்றி நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பு, இயக்கம் என சினிமாவின் மற்ற துறையிலும் கால் பதிக்க முடிவு செய்துள்ளாராம்.

சென்னையில் 95 கல்லூரிகள் பங்கேற்கும் மாநில விளையாட்டு போட்டி

சோழிங்கநல்லூரில் உள்ள செயிண்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் ஆண்டு தோறும் கல்லூரிகள் இடையேயான ‘ஜெட்ஸ்’ விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 12–வது கல்லூரிகள் இடையேயான ‘ஜெட்ஸ்’ மாநில விளையாட்டுப்போட்டி மார்ச் 1–ந்தேதி, 2–ந்தேதி மற்றும் 8–10–ந்தேதிகளில் நடக்கிறது.
மாநிலம் முழுவதும் இருந்து என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகம், பெண்கள் கல்லூரி என 95 அணிகள் பங்கேற்கின்றன.
கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, பால் பேட்மின்டன், பேட்மின்டன் (ஆண்கள் மட்டும்) டேபிள் டென்னிஸ், செஸ், கால்பந்து (ஆண்கள் மட்டும்) ஆகிய 8 விளையாட்டுகள் நடக்கிறது.
பெண்கள் விளையாட்டுப் போட்டி வருகிற 1 மற்றும் 2–ந்தேதிகளில் நடக்கிறது. ஆண்கள் விளையாட்டு போட்டி 8–ந்தேதி முதல் 10–ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தப்போட்டிக்கான மொத்த செலவு ரூ.12.28 லட்சம் ஆகும். கடந்த முறை செயிண்ட்ஸ் ஜோசப்ஸ் அணி ஓட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.
மேற்கண்ட தகவலை செயிண்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாக இயக்குனர் பாபு மனோகரன் தெரிவித்துள்ளார்.

மார்ஷல் நேசமணி மணி மண்டபம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களையும், ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் கொடுத்து தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடு பட்டவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் நினைவு மண்டபங்கள், திருவுருவச் சிலைகள் அமைத்தல் போன்ற பணிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழர்களின் சமூக பண்பாட்டு விடுதலைக்காகவும், தமிழகத்தின் தென் எல்லையாக கன்னியாகுமரியை தாய்த்தமிழகத்துடன் தக்க வைத்துக் கொள் வதற்காகவும் போராட்டங் கள் நடத்தி தியாகம் செய்தவர் நேசமணி. இதனால் இவர் மார்ஷல் நேசமணி என்றும், குமரித்தந்தை என்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படும் பெருமை பெற்றவர் ஆவார். மார்ஷல் நேசமணி நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவிகள் வகித்து மக்களுக்கு தொண்டு செய்தவர் ஆவார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா மார்ஷல் நேசமணியின் அரும்பணியை நினைவு கூர்ந்து அவரை பெருமைப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1-ஆம் தேதியன்று நாகர் கோவிலில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிட்டார்.
மார்ஷல் நேசமணியின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் மார்பளவு வெண்கலச் சிலையுடன் 48 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பச்சைமால், செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் முனைவர் இராசாராம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ராஜீவ் காந்தி சிலை உடைப்பு: பெரம்பூரில் காங்கிரசார் மறியல்

பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் 2 இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் உடைக்கப்பட்டன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் இன்று காலை காங்கிரசார் சுமார் 500–க்கும் மேற்பட்டோர் அந்த இடம் அருகே திரண்டனர்.
சிலையை உடைந்தவர்களை கைது செய்யக்கோரி அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் சாலையில் படுத்து மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் சீமானை கைது செய்கக் கோரி கோஷமிட்டு சாலையில் அமர்ந்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். சக்திவேல், ஜோதி, ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோ, சுரேஷ் பாபு, சூளை ராஜேந்தர், கொண்டல் தாசன், மணிபால், அகரம் கோபி, மகளிர் அணி அபி உள்பட 500–க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்